உள்ளடக்கத்துக்குச் செல்

பைசலாபாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசலாபாத் மாவட்டம்
மாவட்டம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்பஞ்சாப்
தலைமையிடம்பைசலாபாத்
வட்டங்கள்6
அரசு
 • District Coordination OfficerSalman Ghani
மக்கள்தொகை
 (1998)[1]
 • மொத்தம்53,34,678
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
மொழிகள் (1981)பஞ்சாபி மொழி 98.2% [2]
இணையதளம்www.faisalabad.gov.pk

பைசலாபாத் மாவட்டம் (Faisalabad District) (உருது: ضلع فیصل آباد‎) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்த மாவட்டங்களில் ஒன்றாகும். பைசலாபாத் கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பைசலாபாத் நகரம் ஆகும். 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 54,29,547ஆகும். மக்கள் தொகையில் 42% பைசலாபாத் நகரத்திலும், நகர்புறங்களிலும் வாழ்கின்றனர். பாகிஸ்தானில் கராச்சி மற்றும் லாகூர் அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக பைசலாபாத் உள்ளது.[3]

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

பைசலாபாத் மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக பைசலாபாத், மதினா, ஜின்னா, இக்பால், சக் ஜும்ரா, ஜரண்வாலா, சமுந்திரி மற்றும் தண்டிலியான்வாலா எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4] எட்டு வட்டங்களை 820 வருவாய் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் பைசலாபாத் பெருநகர மாநகராட்சியும், நான்கு நகராட்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

1998-ஆம் ஆண்டில் மக்கள் தொகையியல் கணக்கெடுப்பின் படி, 5,856 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பைசலாபாத் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 54,29,547 ஆகும். அதில் ஆண்கள் 28,26,908 (50.07%); பெண்கள் 26,02,639 (49.93%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 108.6 ஆண்கள் வீதம் உள்ளனர். நகரபுற மக்கள் தொகை 2318433 (42.70%) ஆக உள்ளது. எழுத்தறிவு விகிதம் 51.9% ஆக உள்ளது. தொகை வளர்ச்சி விகிதம் (1981 - 1998) 2.51% ஆக உள்ளது. [5]

மொழிகள்

[தொகு]

1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பஞ்சாபி மொழி 97.5% மக்களின் தாய் மொழியாக உள்ளது. உருது மொழி 1.2% மக்கள் பேசுகின்றனர். உருது மொழி தேசிய மொழியாகவும்; ஆங்கில மொழி அலுவல் மொழியாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Faisalabad, Punjab Police profile[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Stephen P. Cohen (2004). The Idea of Pakistan. Brookings Institution Press. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0815797613.
  3. "Urban Resource Centre (1998 census details)". Archived from the original on 2006-05-13. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.
  4. CDG Faisalabad | Welcome...
  5. FAISALABAD DISTRICT AT A GLANCE

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசலாபாத்_மாவட்டம்&oldid=3582934" இலிருந்து மீள்விக்கப்பட்டது